

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், நீதித்துறை ஊழியர் களை குறிவைத்து நேற்று மாலை நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
காபூலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த புறநகர் பகுதியில் நீதி அமைச்சகம் உள்ளது. இதையொட்டி சுரங்கம் மற்றும் நிதி அமைச்சகங்கள் உள்ளன. மேலும் கடந்த ஆண்டு தலிபான்களின் தாக்குதலுக்கு இலக்கான செரீனா ஹோட்டல் உள்ளது.
இந்நிலையில் நீதித்துறை ஊழியர்கள் நேற்று மாலை 4 மணியளவில் தங்கள் பணியை முடித்துக்கொண்டு, வாகன நிறுத்துமிடத்தில் இருந்த மினி பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்பகுதியில் பலத்த அதிர்வை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். இவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டனர்.
தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் இத்தாக்கு தலை நடத்தியதாக கூறப்படு கிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள் ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு இது வரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. காபூலில் கடந்த ஒரு வாரத்தில் நடத்தப் பட்ட 3-வதுமிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.