

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் அதன் பின்னர் தொடர்ந்து எழுந்த அதிர்வுகளுக்கு அந்நாட்டில் உள்ள 575 பள்ளிகள் முற்றிலும் இடிந்து நாசமானதாக நேபாள கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேபாள கல்வித் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி," நேபாளத்தில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்துக்கு 969 பள்ளிகள் சிதைந்துள்ளன. 575 பள்ளிகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின.
பக்தப்பூர் மற்றும் லலித்பூரின் 99 சதவீத பள்ளிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. காதமாண்டுவில் உள்ள் 90 சதவீத பள்ளிக் கட்டிடங்கள் மாற்று வாழ்விடமாக மாற்றப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்து மே 15-ந் தேதி திறக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.