

வடகொரியாவில் அதிபர் தலைமை யில் நடைபெற்ற ராணுவ கருத் தரங்கில் தூங்கியதால் பாதுகாப்பு அமைச்சருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தென்கொரியா வின் உளவு அமைப்பான தேசிய புலனாய்வு சேவை அதிகாரிகள் அந்நாட்டு நாடாளுமன்ற குழுவின் ரகசிய கூட்டத்தில் கூறும்போது, “கடந்த ஏப்ரல் மாத இறுதியில், பியாங்யாங் நகரில் உள்ள காங் கான் ராணுவ பயிற்சி மையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் முன் னிலையில் வடகொரிய பாது காப்புத் துறை அமைச்சர் ஹயான் யாங் சோல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்” என்றனர்.
ஆனால் இந்தத் தகவல் எப்படி கிடைத்தது என்ற விவரத்தை தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட் டனர். பல்வேறு ஊடகங்களில் இந்தத் தகவல் வெளியானதாக வும், இது உண்மைதான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் ராணுவ கருத்தரங்கு நடைபெற்றபோது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹயான் யாங் சோல் சற்று கண்ண யர்ந்துள்ளார். அத்துடன் பின்புறம் இருந்த ஒருவருடன் பேசி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிம், யாங் சோலை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு தனது தந்தை இறந்ததும், கிம் அதிகாரத் தைக் கைப்பற்றினார். தனக்கு எதிரான கருத்துகளை வெளிப் படுத்துபவர்கள் உறவினர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உட னடியாக மரண தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.