

ஆப்கானிஸ்தானில் போர் மற்றும் போலியோவால் கால்களை இழந்தவர்களுக்கு உதவும் வகையில், இந்தியாவைச் சேர்ந்த ‘ஜெய்ப்பூர் புட்' நிறுவனம் 1,000 செயற்கைக் கால்களை இலவசமாக வழங்குகிறது.
"இந்த செயற்கைக் கால்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டோருக்கு இலவசமாக வழங்கப்பட இருக் கின்றன" என்றார் ஆப்கானிஸ் தானின் சமூக விவகாரத் துறை அமைச்சர் அமினா அப்சாலி.
இது தொடர்பாக அமைச்சர் அமினா அஃப்சாலி மற்றும் ஜெய்ப் பூர் புட் நிறுவனர் டி.ஆர். மேத்தா ஆகியோரிடையே ஒப்பந்தம் ஒன் றும் கையெழுத்தாகியிருக்கிறது.
“ஆயிரம் பேருக்கு செயற்கைக் கால்களைப் பொருத்துவதன் மூலம், அவர்கள் தங்களின் சுயதேவையைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ள முடியும்” என மேத்தா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள மாற்றுத்திறனாளி தொழில்நுட்பப் பயிற்சி மையத்திற்கும் இந்தியா உதவ இருக்கிறது.