மருந்துடன் விஷம் கலந்து 2 நோயாளிகளை கொலை செய்த நர்ஸுக்கு 35 ஆண்டு சிறை தண்டனை

மருந்துடன் விஷம் கலந்து 2 நோயாளிகளை கொலை செய்த நர்ஸுக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
Updated on
1 min read

பிரிட்டனில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் நோயாளி களுக்கான மருந்தில் விஷம் கலந்தது மற்றும் அதனால் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் நர்ஸுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 35 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

கிரேட் மான்செஸ்டர் மாநகரில் உள்ள ஸ்டாக்போர்ட் என்ற இடத்தில் ஸ்டெப்பிங் ஹில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் விக்டோரினோ சுவா (49) நர்ஸாக பணிபுரிந்து வந்தார்.

இவர், கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 2 வார்டுகளில் பணியில் இருந்தபோது நோயாளி களுக்கு செலுத்தப்படும் சலின் பாட்டில் மற்றும் வேறு சில மருந்து புட்டிக்குள் (ஆம்புல்) இன்சுலினை ஊசி மூலம் செலுத்தி உள்ளார்.

இதுபற்றி அறிந்திராத மற்ற நர்ஸ்கள், வயதான நோயாளி களுக்கு அந்த மருந்துகளைப் பயன்படுத்தி உள்ளனர். இன்சுலின் அளவு அதிகமாக இருந்ததால் 3 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையின்போது, நோயாளிகளுக்கு மருந்து வழங்குவதற்கான குறிப்புகளை சுவா மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் சுவா கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து சுவாவின் வீட்டி லிருந்த ஒரு கடிதம் கைப்பற்றப் பட்டது. அதில், “தேவதையாக இருந்த நான் தீய சக்தியாக மாறி விட்டேன், எனக்குள் ஒரு பிசாசு உள்ளது” என அதில் எழுதி இருந்தார்.

இதுதொடர்பாக மான்செஸ் டரில் உள்ள கிரவுன்கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. சுவா மீது 31 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. 22 நோயாளிகளுக்கு விஷம் கொடுக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்ததையடுத்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப் பட்டது.

சுவா, டிராசி ஆர்டென் (44) மற்றும் ஆல்பிரட் வீவர் (83) ஆகிய 2 நோயாளிகளை கொலை செய்தது நிரூபணமாகி உள்ளதாகவும் அவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in