Last Updated : 31 May, 2015 11:41 AM

 

Published : 31 May 2015 11:41 AM
Last Updated : 31 May 2015 11:41 AM

ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றி வீரமரணமடைந்த 161 இந்திய வீரர்களுக்கு இணையத்தில் நினைவுச் சுவர்

போரால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் வீரமரணமடைந்த ஐ.நா. அமைதிப்படை வீரர்களுக்காக, ஐக்கிய நாடுகள் மன்றத் தலைமையகத்தில் நினைவுச் சுவர் ஒன்றை எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முதல் படியாக, இணையத்தில் மெய்நிகர் நினைவுச் சுவர் ஒன்றை (www.pminewyork.org) இந்தியா அமைத்துள்ளது. இந்தச் சுவரில் தற்போது இந்திய அமைதிப்படை வீரர்கள் 161 பேரின் பெயர்கள், விவரங்கள் ஆகியவை அவர்களின் புகைப்படங்களோடு பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்தச் சுவரில் தங்கள் நாட்டின் வீரர்கள் பற்றிய தகவல்களையும் பதிவேற்ற மற்ற நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 'சர்வ தேச ஐ.நா.அமைதிப்படை தினம்' அனுசரிக்கப்பட்டது. அப்போது பணியில் இறந்த 125 வீரர்களுக்கு டேக் ஹேம்மர்ஸ்கோல்ட் பதக்கம் வழங்கப்பட்டது. விருது பெற்ற வர்களில் ராஜு ஜோசப் மற்றும் லான்ஸ் நாயக் நந்த் ராம் ஆகிய இரண்டு இந்தியர்களும் அடங்குவர்.

மேற்கண்ட விழாவின்போது இந்தியாவின் ‘மெய்நிகர் நினைவுச் சுவரை' ஐ.நா.வுக்கான நிரந்தர இந்தியத் தூதர் அசோக் குமார் முகர்ஜி தொடங்கி வைத்தார். இதற்கிடையே ஐ.நா.தலைமையகத்தில் உண்மையான நினைவுச் சுவர் ஒன்றை எழுப்பி அதில் வீரமரணமடைந்த அமை திப்படை வீரர்களின் பெயர்களைப் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா.அமைதிப்படைக்கு அதிகளவு எண்ணிக்கையில் ராணுவ வீரர்களை அனுப்பும் நாடு களில் இந்தியாவும் ஒன்று என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x