தன்பாலின திருமணத்துக்கு அயர்லாந்தில் சட்டபூர்வ அங்கீகாரம்

தன்பாலின திருமணத்துக்கு அயர்லாந்தில் சட்டபூர்வ அங்கீகாரம்
Updated on
1 min read

அயர்லாந்தில் தன்பாலின திருமணத்துக்கு ஆதரவாக 62 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் அந்த நாட்டில் தன்பாலின உறவுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உலகில் தற்போது 20 நாடு களில் தன்பாலின திருமணம் சட்டப் பூர்வமாக அங்கீகரிக் கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் அயர்லாந்தும் இணைந்துள்ளது. தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அந்நாட்டில் அண்மையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 19 லட்சத்து 35 ஆயிரம் பேர் வாக்களித்தனர். அவர்களில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தன்பாலின திருமணத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

7 லட்சத்து 34 ஆயிரம் பேர் எதிராக வாக்களித்தனர். ஒட்டுமொத்த கணக்கீட்டின்படி 62 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களித்திருப்பதால் அந்த நாட்டில் தன்பாலின திருமணத் துக்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகளாவிய அளவில் பொது வாக்கெடுப்பு நடத்தி தன்பாலின உறவுக்கு அங்கீகாரம் அளித்த முதல்நாடு என்ற பெருமையை அயர்லாந்து பெற்றுள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் அயர்லாந்தில் கருக்கலைப்புக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. இந்த தடை சட்டத்தால் கடந்த 2012 அக்டோபர் மாதம் இந்திய பல் மருத்துவர் சவீதா உயிரிழந்தார். அயர்லாந்தில் வசித்த அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. ஆனால் கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்காததால் ரத்தத்தில் தொற்றுநோய் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடை பெற்றன. ஆனால் இதுவரை கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. தற்போது கருக்கலைப்பு குறித்தும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in