கணிதவியல் மேதை ஜான் நாஷ் கார் விபத்தில் மரணம்

கணிதவியல் மேதை ஜான் நாஷ் கார் விபத்தில் மரணம்
Updated on
1 min read

பொருளாதார அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற கணிதவியல் மேதை ஜான் நேஷ் கார் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் டர்ன்பைக் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கார் விபத்தில் அவரும் அவரது மனைவி அலிசியாவும் (82) உயிரிழந்தனர்.

ஜான் நாஷ் 1928-ம் ஆண்டும் மேற்கு வர்ஜீனியா மாகாணத்தில் பிறந்தார். நாஷ் ஈகுவிலிபிரியம் (Nash Equilibrium) அதாவது கேம் தியரி (Game theory) என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் கணித சூத்திரத்தில் ஜான் நேஷ் மேற்கொண்ட ஆய்வுப் பணி பல தலைமுறைகளைச் சேர்ந்த கணிதவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக பயன்படுகிறது. 1994 ஆம் ஆண்டு அவருக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பேரனாய்ட் ஸ்கிஷோஃப்ரெனியா என்ற நோயால் பெரும் பாதிப்புக்குள்ளாகி மீண்ட ஜான் நாஷ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட >"ஏ பியூடிஃபுல் மைண்ட்" (A Beautiful Mind) என்ற திரைப்படம், ஆஸ்கர் விருது வென்றதுடன் உலகப் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in