

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் டேவிட் கேமரூன் மீண்டும் பிரதமர் ஆவார் என்று அந்நாட்டில் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இங்கிலாந்து பொதுத்தேர்தலில் வியாழக்கிழமை நடந்து முடிந்தது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 650. இதில் இங்கிலாந்தில் 533, ஸ்காட்லாந்தில் 59, வேல்ஸில் 40, வடக்கு அயர்லாந்தில் 18 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க 326 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
பிரிட்டனில் பொதுவாக கன்சர்வேட்டிவ் கட்சியோ, தொழிலாளர் கட்சியோ ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது. தேர்தலில் முடிவுகள் அந்நாட்டு நேரப்படி இன்று மாலை தெரியவரும். வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மீண்டும் டேவிட் கேமரூன் பிரதமராவதற்கு வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வாக்கு எண்ணிக்கை நிலவரத்திலும் ஆளுங்கட்சி முன்னிலை வகித்து வருவதால், கேமரூன் கட்சி வெற்றியடைய அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.