

பூமி தினத்தை முன்னிட்டு எடுக்கப் பட்ட சுமார் 36 ஆயிரம் பேரின் ‘செல்பி’ வகை புகைப்படங்களை இணைத்து, ‘குளோபல் செல்பி’ புகைப்படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது.
தங்களைத் தாங்களே படம் எடுத்துக் கொள்ளும் முறைக்கு ‘செல்பி’ என்று பெயர். கடந்த ஆண்டு இந்தப் பெயர் பிரபலமா னது.
பூமி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்படு கிறது. நடப்பு ஆண்டு, பூமி தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் துவதற்காக, மக்கள் செல்பி புகைப்படங்களை எடுத்து, குளோபல் செல்பி என்ற இணைப் புடன் சமூக இணைய தளங் களில் பதிவேற்றம் செய்யும்படி நாசா விண்வெளி ஆய்வு மையம் அழைப்பு விடுத் திருந்தது.
இதற்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தது. 113 நாடுக ளிலிருந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், குளோபல் செல்பி என்ற பெயரில் புகைப்படம் எடுத்து சமூக இணையதளங்களில் வெளியிட்டனர்.
இவற்றிலிருந்து சுமார் 36 ஆயிரம் பேரின் புகைப்படங்களை எடுத்து, அவற்றை சுயோமி தேசிய துருவ சுற்றுப்பாதை (என்பிபி) செயற்கைக்கோளால் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத் துடன் இணைத்தது நாசா.
என்பிபி செயற்கைக்கோள் பூமியின் புகைப்படத்தை, பூமி தினத்தில் எடுத்தது.
அந்தப் புகைப் படத்துடன் 36 ஆயிரம் செல்பி புகைப்படங் களையும் இணைத்து, குளோபல் செல்பி புகைப் படத்தை நாசா உருவாக்கியது.
இந்தப் புகைப்படத்தின் சிறப்பம்சம் என்னவெனில் 3.2 கிகாபிக்ஸல் அளவுடையதாகும். இப்புகைப்படத்தை கணினியில் பெரிதுபடுத்திப் பார்த்தால், 36 ஆயிரம் புகைப்படங்களையும் பெரிய அளவில் தனித்தனியே தெளிவாகப் பார்க்க முடியும்.
இது தொடர்பாக நாசா புவி அறிவியல் துறையின் அறிவியல் திட்ட இயக்குநரகத்தின் துணை இயக்குநர் பெக் லூஸ் கூறியதாவது:
பல்வேறு நாடுகளி லிருந்து அதிகப்படியான புகைப் படங்கள் வந்தன. நமது புவியை மக்கள் கொண்டாடிய விதத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பல்வேறு ஆண்டுகளாக செயற்கைக்கோள் மூலம் அளவிடப்பட்ட பூமியின் புகைப் படத்துடன், மக்களின் செல்பி புகைப் படங்களை இணைத்து இதனை உருவாக்கியுள்ளோம்” என்றார்.
இப்புகைப்படத்தை> http://www.nasa.gov/content/goddard/2014-globalselfie-wrap-up/#.U383yyjid6J என்ற இணையதளத்தில், பெரிது படுத்திப் பார்க்கலாம்.