

உக்ரைனில் ராணுவத்துக்கும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் களுக்கும் இடையே போர் மிகத் தீவிரமடைந்துள்ளது. ராணுவத் தின் தொடர் தாக்குதலால் 30-க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மோதல் நடக்கும் சில பகுதிகளில் துப்பாக்கி குண்டு மற்றும் பிற வெடிகுண்டுத் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். இதனால் சாலைகளில் சில இடங்களில் ஆங்காங்கு சடலங்கள் சிதறிக் கிடக்கின்றன.
போர் விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உக்ரைன் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. டோனெட்ஸ்க் பகுதியிலுள்ள விமான நிலையத்தைக் கைப் பற்றும் நோக்கில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருகின்றனர். இதையடுத்து அங்கு ராணுவம் தனது தாக் குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆங்காங்கு கிடக்கும் சடலங் கள், அரசு மருத்துமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் 30-க்கும் மேற்பட்டவை கிளர்ச்சியாளர்களின் சடலங் களாகும்.
புதிய அதிபர் சூளுரை
உக்ரைனில் அதிபர் தேர்தலில் பெட்ரோ போரோஸென்கோ வெற்றி பெற்றுள்ளார். அவர், இன்னும் பதவியேற்காத நிலையில், உக்ரைனில் மீண்டும் அமைதி திரும்பச் செய்வோம் என்றும், உக்ரைனை மற்றொரு சோமாலியாவாக மாற்ற அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து ஊடுருவல்காரர்களையும் விரட்ட அவர் சூளுரைத்துள்ளார். பயங்கர வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை எனவும் பெட்ரோ தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ராணுவத்துக் கும்-கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் முற்றி யுள்ளது. திங்கள்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் சண்டை நீடித்தது. இதனால் கிழக்கு உக்ரை னில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என டோனெஸ்ட்க் நகர மேயர் அறிவுறுத்தியுள்ளார்.
உக்ரைனில் கிழக்குப் பகுதியில் டோனெட்ஸ்க் விமான நிலையத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்.