நேபாளத்துக்கு பாக். மாட்டுக் கறி அனுப்பியதால் சர்ச்சை

நேபாளத்துக்கு பாக். மாட்டுக் கறி அனுப்பியதால் சர்ச்சை

Published on

நேபாளத்துக்கு பாகிஸ்தான் அனுப்பிய உணவுப் பொருட்களில் மாட்டுக் கறி இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் பசுக்களை கொல்வது சட்டப்படி தவறாகும். முன்பு பசு வதைக்கு நேபாளத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. இப்போது 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து நேபாளத்துக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மாட்டுக் கறியும் இடம் பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியது: மாட்டுக் கறியை நேபாளத்துக்கு அளித்தது பெரிய சர்ச்சையாகும் என்று எதிர்பார்க்கவில்லை. பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை அளித்த பொருட்களை நேபாளத்துக்கு கொண்டு சேர்க்கும் பணியைத்தான் ராணுவம் செய்தது என்றார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், பொதுவாக பாகிஸ்தான் அனைத்து நாடுகளுக்கும் அவசர காலத்தில் அனுப்புவது போன்றுதான் நேபாளத்துக்கும் உணவுப் பொருட்களை அனுப்பியுள்ளது. அதில் மாட்டுக் கறி இருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in