

கடந்த 2013, 2014-ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து 567 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அந்த நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டில் அமெரிக்க எல்லைக்குள் நுழைய முயன்ற 4057 இந்தியர்கள் பிடிபட்டனர். இதில் 2539 பேர் பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல கடந்த 2014-ம் ஆண்டில் 2300 இந்தியர்களை குடியேற்றத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் 2013-ம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து 286 பேரும் 2014-ம் ஆண்டில் 281 பேரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவல்களை அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.