

ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக எம்.பி. ஒருவர் பதவியேற்கும்போது பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் எடுத்தார்.
நியூ சவுத் வேல்ஸ் மாகாண மேலவையில் அந்த எம்.பி.யின் பெயர் டேனியல் முகி (32). அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் மேற்கொண்டது குறித்து டேனியல் முகி கூறியது:
கிறிஸ்தவர்களின் பைபிள், முஸ்லிம்களின் குர்ஆன், யுதர்களின் தோரை போன்று பகவத் கீதையும் மிகவும் புனிதமானது.
ஆஸ்திரேலியாவில் பகவத்கீதை மீது சத்தியமிட்டு பதவிப் பிரமாணம் மேற்கொண்ட முதல் எம்.பி. என்ற பெருமை எனக்கு கிடைத்துள்ளதை கவுரவமாக கருதுகிறேன்.
ஆஸ்திரேலியா அனைத்து மதத்தையும் ஏற்றுக் கொள்ளும் சிறந்த நாடு. எனவேதான் நான் பகவத் கீதை மீது பிரமாணம் எடுத்துக் கொள்ள திறந்த மனதுடன் அனுமதி தரப்பட்டது.
ஆஸ்திரேலிய மக்களின் மேம்பாட்டுக்காக எனது பணியின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன் என்று அவர் கூறினார்.டேனியல் முகியின் பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்கள். 1973-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர்.
டேனியல் முகி 3 பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த டேனியல் முகி சமூக சேவை உள்ளிட்ட பணிகளையும் ஆற்றி வருகிறார்.