

தென் பசிபிக் கடலில் உள்ள சாலமன் தீவுகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் சான்டா குரூஸ் தீவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த பொருட்சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்றும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
உலகில் 90 சதவீத நிலநடுக்கங்கள் ஏற்படும் `பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்' பகுதியில் சாலமன் தீவுகள் அமைந்திருப்பதால், இங்கு அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகின்றது.