Published : 15 May 2015 11:15 AM
Last Updated : 15 May 2015 11:15 AM

யோகா, தாய்ச்சீ.. ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்

சீன சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி இன்று பெய்ஜிங்கின் டாங்சென் பகுதியிலுள்ள சொர்க்கக் கோயிலுக்குச் செல் கிறார். அங்கு, மோடி, அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முன்பு இந்தியாவின் யோகா, சீனாவின் தாய்ச்சீ கலைகள் ஒருங்கிணைந்து நிகழ்த்தப்படுகின்றன.

பெய்ஜிங்கிலுள்ள யோகி யோகா மையத்தின் 200 உறுப்பினர் கள் யோகா கலையை நிகழ்த்த, 200 பேர் தாய்ச்சீ கலையை நிகழ்த்துகின்றனர்.

இவ்விரு கலைகளின் தோற்ற மும், செய்முறையில் வேறுபாடுகள் கொண்டவை. ஆனால், பயன் ஒன்றுதான். பல்வேறு உபாதை களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக் கும் கலைகளில் இரண்டுமே முன்னணியில் உள்ளன.

சீன மக்கள் யோகா கலையை அறிந்துள்ள அளவுக்கு, இந்தியர் கள் தாய்ச்சீ கலையைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

இந்தியாவின் கலைச் செல்வம் யோகா என்றால், சீனாவுக்கு தாய்ச்சீ.

அமைதியான நிலையில் உட் கார்ந்து, சுவாசத்தையும், மனதை யும் கட்டுப்படுத்துவது யோகா. மெதுவான உடல் அசைவுகளுடன் மனதை ஒருமுகப்படுத்துவது தாய்ச்சீ.

கராத்தே, குங்பூ போன்ற வேக மான கலை தாய்ச்சீ அல்ல. மிக மெதுவான உடல் அசைவுகள் மூலம் இக்கலையை பயில முடியும். முதியோர்களும் இக்கலையைப் பின்பற்ற முடியும்.

மிக மெதுமான அசைவுகள்தான் என்றாலும், தாய்ச்சீ கலையில் வீரர்களுக்கான போட்டியைக் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

சீன மக்கள் மத்தியல் சென் ஷு, யாங் ஷு உள்பட 8 விதமான தாய்ச்சீ கலை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இக்கலையை தொடர்ந்து பின்பற்றும் ஒருவர், இயற்கையுடன் இணக்கமாவதை உணர முடியும்.

“தாய்ச்சீயின் அசைவுகளைப் பார்ப்பதற்கு மெதுவாக நடனம் ஆடுவதைப் போன்று இருக்கும்” என்று மருத்துவர் மற்றும் மறுவாழ்வு சிறப்பு நிபுணரான மேரி.எல் ஜூரிஸ்ஸன் கூறுகிறார்.

சீனாவில் பரவலாகக் காணப் படினும், ஹ்ஹபெய் மாநிலத்தின் ஹன்தான், ஹூபெய் மாநிலத்தின் ஊதாங் மலைப்பகுதி ஆகிய இடங்கள் தாய்ச்சீ கலைக்கு புகழ்பெற்றவை.

ஹாங்காங் சிட்டி பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணி யாற்றுபவர் சித்திர சிவக்குமார். தமிழரான இவர், 6 மாதங்கள் தொடர்ந்து வகுப்புக்குச் சென்று இக்கலையை கற்றுள்ளார்.

அவர் கூறும்போது, “இக்கலை யில் ஈடுபடும்போது உடலின் அசைவுகள் மெதுவாகவும், அதே சமயம் தொடர்ச்சியாகவும் இருக்க வேண்டும். இடையில் நிறுத்தக் கூடாது. இக்கலை உடலுக்கு மட்டுமானது அல்ல. மூளைக்கும் தொடர்புடையது. உதாரணத்துக்கு, நமது உடலை வலப்பக்கம் திருப்பும்போது, நமது மூளை மற்றும் கண்களின் ஓட்டமும் அப்பக்கத்தில் இருப்பது மிக முக்கியதும்” என்று தெரிவித்தார்.

தாய்ச்சீ கலையும், யோகாவும் சிறிது வேறுபட்டுள்ள போதிலும், இரண்டின் பயன்களும் ஒன்று தான். இரண்டிலும் மன அமைதி பெறுவதுடன், உடல் ஆரோக்கிய மும் சீரடையும். யோகா மற்றும் தாய்ச்சீயில் சுவாசப் பயிற்சி பிரதான இடத்தைப் பிடித்திருப்பதால், பல்வேறு நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ள இக்கலைகள் உதவுகின்றன.

இரும்புத்தாது முதல் கணினித் தொழில்நுட்பம் வரை இந்தியா விலிருந்து சீனாவுக்கு வந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது மிகவும் பிரபலமடைந்து இருப்பது யோகா. காலம் தாழ்ந்து சீனாவில் தவழத் தொடங்கி, தற்போது தடைபடாத ஓட்டத்தை எட்டியுள்ளது.

யோகாவின் சீனத் தாய்

சீனாவின் அதிகாரப்பூர்வ அலைவரிசையான சிசிடிவியில் 1985 -ல் ஷாங் ஹெய் லான் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் யோகாவை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். இவர்தான், சீனாவில் யோகாவின் தாய் என்று போற்றப்படுகிறார்.

தற்போதைய நிலையில் பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் யோகாவைக் கற்றுத் தரும் மையங்கள் அதிக அளவில் உள்ளன. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவில் யோகா கற்பவர்களில் பெரும்பாலும் பெண்களே. இந்திய பயிற்சியாளர்கள் மூலம் யோகா கற்பதையே பெரும்பாலான சீனர்கள் விரும்புகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் மாஷா கிராம். இவர், மேற்கத்திய நடன ஆசிரியர். இவர், சீனாவிலும் இந்தியாவிலும் பயணம் மேற்கொண்டபோது, தாய்ச்சீ மற்றும் யோகா குறித்த அடிப்படையை அறிந்துள்ளார். இக்கலைகளில் பயன்படும் சுவாசப் பயிற்சியை மேற்கத்திய நடனத்தில் அறிமுகப்படுத்தி புதிய புரட்சியை மாஷா கிராம் செய்துள்ளார்.

‘சீனாவில் யோகா வகுப்புக்கு செல்வது என்பது தேநீர் கடைக்குச் செல்வதைப் போன்றது’ என்று கூறப்படுவது உண்டு. இதனைப் பார்க்கும்போது இக்கலையின் மீதான சீன மக்களின் ஆர்வம் வெளிப்படுகிறது.

சீனாவும், இந்தியாவும் உலக நாகரிகத்துக்கு அளித்த முக்கியக் கொடை இவ்விரு கலைகள்.

‘தி இந்து’வுக்காக பெய்ஜிங்கிலிருந்து சீன வானொலி தமிழ்ப்பிரிவு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x