

ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கா (61) 2015-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளார். இதில் ரூ.57 லட்சம் பரிசும் அடங்கும்.
இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு போட்டியில் கொல்கத்தாவில் பிறந்த எழுத்தாளர் அமிதவ் கோஷின்
‘ஸீ ஆப் பாப்பீஸ்’ நாவல் உட்பட 10 எழுத்தாளர்களின் படைப்புகள் புக்கர் பரிசுக்கான இறுதிப் போட்டியில் இருந்தன.
கிராஸ்னாஹோர்காவின் எழுத்துகள் மிகவும் வியப்பூட்டும் வகையிலும், தற்காலிக நடப்புகளை உணர்த்தும் வகையிலும் உள்ளன. ஆழமான கற்பனைத் திறன், தீவிர ஆர்வம், மனிதாபிமானம் செரிந்த நகைச்சுவை ஆகியவையும் அவரது படைப்புகளை அலங்கரித்துள்ளன. வாசிப்பவர்களை புத்தகத்துடன் கட்டிப்போட்டு விடும் வகையிலும் உள்ளன. என்று தேர்வுக்குழுவினர் கூறியுள்ளனர்.
கிராஸ்னாஹோர்கா ஹங்கேரி மொழியிலேயே தனது படைப்பு களை எழுதியுள்ளார். அதனை இரு மொழி பெயர்ப்பாளர்கள் ஆங்கிலத்தில் எழுதினர்.