

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் குழுவினர், கடலுக்கடியில் எப்போதோ விபத்துக்குள்ளாகி மூழ்கிய கப்பலின் உடைந்த பாகங்களைக் கண்டறிந்துள்ளனர்.
2014 மார்ச் 8-ம் தேதி 239 பேருடன் மலேசிய விமானம் எம்.ஹெச் 370 இந்தியப் பெருங்கடல் மீது பறந்த போது மாயமானது. அது விபத்துக் குள்ளாகி கடலில் விழுந்திருக்க லாம் என நம்பப்படுகிறது.
அவ்விமானத்தை தேடும் முயற்சிகளை பல நாடுகள் கைவிட்டாலும், ஆஸ் திரேலியா தொடர்ந்து தேடி வருகிறது. ஆஸ்திரேலியா வுக்காக டென்மார்க் நிறுவனம் ஃபுக்ரோ சர்வே இப்பணியை மேற்கொண்டு வருகிறது.
இக்குழுவினர், கடலுக்கடி யில் தேடிக்கொண்டிருந்த போது, பல ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக் குள்ளாகி மூழ்கிய கப்பலின் உடைந்த பாகங்களைக் கண்டறிந் துள்ளனர். அங்கு, கப்பலின் நங்கூரம் மற்றும் மணி ஆகியவை இருப்பது புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஃபுக்ரோ சர்வேயின் தேடுதல் இயக்குநர் பால் கென்னடி கூறிய தாவது: கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடலுக்கடியில் ஆழத்தில் மிகச்சிறிய உருவத்தில் இருக்கும் உலோகப்பொருளைக் கூட எங்க ளால் கண்டுபிடிக்க முடியும் என் பதை இது வெளிப்படுத்துகிறது” என்றார்.