ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா: அதிகாரப்பூர்வ அறிக்கையில் தகவல்

Airman 1st Class Matthew Seefeld
Updated on
1 min read

வாஷிங்டன்: ஈ​ரானுக்கு எதி​ரான போரில் போர் விமானங்​கள், டிரோன்​கள் உட்பட 42 அமெரிக்க ராணுவ விமானங்​களுக்கு இழப்பு அல்​லது சேதம் ஏற்​பட்​ட​தாக நாடாளு​மன்ற ஆய்வு சேவை (சிஆர்​எஸ்) அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் தரவு வகைப்​பாடு, தொடர்ந்து நடை​பெறும் போர், இழப்புக்​கான காரணங்​களை உறுதி செய்​தல் உள்​ளிட்ட பல்​வேறு காரணி​களால் இழப்​பு​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என்​றும் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. ஈரானுக்கு எதி​ரான போரின் செல​வு, ஏற்​கெனவே சுமார் 29 பில்​லியன் டால​ராக உயர்ந்துவிட்டதாக​வும் இந்​தச் செலவு அதி​கரிப்​பில் பெரும் பகு​தி, ராணுவ உபகரணங்​களை சீரமைக்க அல்​லது மாற்​று​வதற்​கான செல​வாகும் என்று பென்​டகன் தெரி​வித்​தது.

இழந்த அல்​லது சேதம் அடைந்த விமானங்​கள் பட்​டியலில், நான்கு எப்​-15 இ ஈகிள் போர் விமானங்​கள், ஒரு எப்​-35 லைட்​னிங்-2 போர் விமானம், ஒரு ஏ-10 தண்​டர்​போல்ட்-2 தரைத்தாக்​குதல் விமானம், ஏழு கேசி-135 ஸ்ராடோடேங்​கர் வானில் எரிபொருள் நிரப்​பும் விமானங்​கள், 24 எம்​கியூ-ஏ ரீப்​பர் டிரோன்​கள் உள்​ளிட்​ட​வை​யும் அடங்​கும்.

போர் இழப்​பு​கள் குறித்த விரி​வான மதிப்​பீட்டை அமெரிக்க பாதுகாப்​புத் துறை இது​வரை வெளி​யிட​வில்​லை. இந்​நிலை​யில் அமெரிக்க நாடாளு​மன்​றம் மற்​றும் அதன் குழுக்​களுக்கு கொள்கை மற்​றும் சட்​ட ரீ​தி​யான பகுப்​பாய்​வு​களை வழங்​கும் சிஆர்​எஸ் அமைப்​பானது, செய்​தி​கள் மற்​றும் அமெரிக்​கப் பாதுகாப்​புத் துறை, அமெரிக்க மத்​திய கட்​டளைப் பிரிவு ஆகியவற்​றின் அறிக்​கைகளை ஆய்வு செய்து இந்த இழப்பு விவரத்தை தொகுத்​துள்​ளது.

ஈரானுக்கு எதி​ராக இஸ்​ரேலும் அமெரிக்கா​வும் கடந்த பிப்​ர​வரி 28ம் தேதி போரை தொடங்​கின. இதில் ஈரானின் உச்ச தலை​வர் கமேனி உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Airman 1st Class Matthew Seefeld
இந்திய அரசியலில் புதிய சூப்பர் ஸ்டார் ‘கரப்பான்பூச்சி’ - சிஜேபி எழுச்சி சொல்லும் சேதி என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in