Last Updated : 21 May, 2015 09:11 AM

 

Published : 21 May 2015 09:11 AM
Last Updated : 21 May 2015 09:11 AM

மரண தண்டனை நிறைவேற்றுபவர்களுக்கு அழைப்பு: சவுதியில் வேலைக்கு விளம்பரம்

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை நிறைவேற்றும் பணிகளைச் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு அரசு விளம்பரம் மூலம் அந்நாட்டு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சமீபகாலமாக சவுதி அரேபியாவில் அதிகளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால் அப்பணிகளைச் செய்ய போதிய அளவு ஊழியர்கள் இல்லை. எனவே, அத்தகைய பணிகளைச் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு விளம்பரம் மூலம் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அரசு சேவை வலைதளம் ஒன்றில் ‘மத கடமையாளர்கள்' என்ற பிரிவில் வேலை வாய்ப்பு விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் எந்த விதமான கல்வித் தகுதியோ அல்லது சிறப்புத் தகுதியோ குறிப்பிடப்படவில்லை எனினும், 'வேலைக்குத் தேர்வு செய்யப்படும் நபர், மரண தண்டனை நிறைவேற்றும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

குடிமைப் பணியில் உள்ள கடைநிலை ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

சீனா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக கடந்த 2014ம் ஆண் டில் அதிகளவு மரண தண்டனை களை நிறைவேற்றிய நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x