

சீனாவில் 'உலக நடைப்பயிற்சி' விழா நடைபெற்றது. இதில் 15,000 பேர் கலந்துகொண்டு, வெவ்வேறு தூரத்திற்கு நடைப் பயணமாக நடந்து சென்றனர்.
உலக நடைப்பயிற்சி தினத்தை முன்னிட்டு, சீனத் தலைநகர் பீஜீங்கில் நடைப்பயிற்சி திருவிழா நடைபெற்றது. நடைப்பயணத்தின் நண்மைகள் குறித்து விழுப்புணர்ச்சி ஏற்படுத்த 2005-ம் ஆண்டு முதல் சீனாவில் ஒவ்வொரு ஆண்டு இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நடைப்பயிற்சி விழாவில் சுமார் 15000த்திற்கும் அதிகமானோர் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டனர்.
5 கி.மீ, 10 கி.மீ, 20 கி.மீ என நிர்ணயிக்கப்பட்ட தூரத்திற்கு நடைப்பயணமாக சென்று விழாவை உற்சாகத்துடன் நிறைவு செய்தனர்.