ஆந்த்ராக்ஸ் கிருமிகளை தவறுதலாக தென் கொரியாவுக்கு கப்பலேற்றியது அமெரிக்கா

ஆந்த்ராக்ஸ் கிருமிகளை தவறுதலாக தென் கொரியாவுக்கு கப்பலேற்றியது அமெரிக்கா
Updated on
1 min read

உயிருடன் இருக்கும் ஆந்த்ராக்ஸ் கிருமிகளை பல்வேறு ஆய்வு மையங்களுக்கும், தென் கொரியாவில் உள்ள ராணுவ தளத்துக்கும் கப்பலில் தவறுதலாக ஏற்றப்பட்டுவிட்டதாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் தென் கொரியாவில் உள்ள 22 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கும் நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான தற்காப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகனிலிருந்து டெக்சாஸ், விஸ்கான்சின், நியூ ஜெர்ஸி, டென்னசிஸி, நியூயார்க், கலிபோர்னியா உட்பட 9 மாகாணங்களுக்கும் உயிருடன் உள்ள ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகள் தவறுதலாக அனுப்பியதாக தெரியவந்திருப்பதை பென்டகன் பாதுகாப்பு அமைச்சகமும் ஒப்புக்கொண்டது.

கிருமி எடுத்துச் செல்லப்பட்ட பகுதிகளில் பரிசோதனை மையங்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸ்டீவ் வாரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் செயல்பாட்டில் நிகழ்ந்த இந்தத் தவறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in