Last Updated : 27 May, 2015 04:44 PM

 

Published : 27 May 2015 04:44 PM
Last Updated : 27 May 2015 04:44 PM

ஒபாமா மகளை மணக்க கால்நடை வரதட்சிணை: கென்ய வழக்கறிஞர் சீரியஸ் பேட்டி

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகளை 7 ஆண்டுகளாக காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய ஒபாமாவின் குடும்பத்துக்கு 50 மாடுகள், 70 ஆடுகள் ஆகியவற்றை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கென்ய வழக்கறிஞர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒபாமாவின் மூத்த மகள் மலியா (16). இவரைத் கடந்த 2008-ம் ஆண்டு முதன்முதலாக பார்த்ததாகவும், அப்போது முதல் அவரை காதலித்து வருவதாகவும் கென்ய வழக்கறிஞரான கிப்ரோனோ, 'தி நைரோபி' பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். தாம் கூறுவது 'சீரியஸ்'தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "ஒபாவின் மகளை பார்த்ததும் எனக்கு பிடித்துவிட்டது. எனது வாழ்க்கையில் இதுவரை வேறு எந்தப் பெண்ணையும் நான் காதலித்ததில்லை. அதனால் மலியாவுக்கு உண்மையாக இருப்பேன் என்பது நிச்சயம். இது தொடபாக அதிபர் ஒபாமாவுக்கு நான் கடிதம் எழுத உள்ளேன்.

அத்துடன், ஒபாமா கென்யா வரும்போது, மலியாவையும் உடன் அழைத்து வர வலியுறுத்த உள்ளேன். அவர் இதற்கு ஒப்புக் கொண்டால், நான் எனது காதலை மலியாவிடம் தெரிவிப்பேன். அத்துடன் அதிபர் ஒபாமாவுக்கு 50 மாடுகள், மற்றும் 70 ஆடுகளை தருகிறேன். எனது கடிதத்தை தூதரகம் ஒபாமாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

மலியாவிடம் தற்கால முறைப்படி ஷாம்பேயின் ஒயினுடன் விருப்பத்தை தெரிவிக்காமல் பாரம்பரிய முறைப்படி எனது விருப்பத்தை வெளிப்படுத்துவேன். திருமணத்துக்கு பின்னர் மலியாவுக்கு பால் கறக்கவும், சோளக் கஞ்சி செய்யும் கெலேஞ்சின் பெண்களின் பாரம்பரியம் குறித்தும் கற்றுக் கொடுப்பேன்" என்று கூறியுள்ளார்.

ஒபாமா மகளின் செல்வாக்கை கொண்டு அவர் மீது காதல் கொண்டீர்களா? என்று கேள்வி எழுப்பியதை திட்டவட்டமாக மறுத்த கிப்ரோனோ, மலியாவுடன் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புவதாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x