

சீனாவில் தென்மேற்குப் பகுதியில் குயாங் நகரில் 9 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 21 பேரை காணவில்லை.
குயாங் நகரில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பிரதேசமான அங்கு பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 9 மாடி கட்டிடம் இடிந்தது. அதில் 35 வீடுகள் இருந்தன.
கட்டிடம் சரியத் தொடங்கிய வுடன் வீடுகளில் இருந்த மக்கள் வெளியே தப்பி ஓடிவிட்டனர். இது வரை 114 பேரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
ஆனால் 21 பேரை காணவில்லை. அவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.