

இந்தியாவின் 'ரா' உளவு அமைப்பு, பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை தூண்டும் விதத்தில் செயல்படுவதாக அந்நாட்டு ராணுவ ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ராவல்பிண்டியில் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை தொடர்ந்து அதன் விவரத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்த ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்,
''பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத செயல்களை இந்திய உளவு அமைப்பான 'ரா' முன்னின்று நடத்துகிறது. பயங்கரவாத செயல்களுக்கு அந்த அமைப்பு முழு ஊக்கம் அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
அண்மையில், கராச்சியில் நடந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பாக முத்தாஹிதா குவாமி என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின் போது அவர்கள் 'ரா' அமைப்பே தங்களது பயங்கரவாத செயல்களுக்கு ஊக்கமளிப்பத்தாக தெரிவித்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவமும் ரா அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை தூண்டுவதாக தெரிவித்துள்ளது.