

இலங்கையில் உள்நாட்டுப் போர் நிறைவடைந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழர்களுக்கு எதிராக மறைமுக யுத்தம் தொடர்கிறது என்று அமெரிக்க ஆய்வு நிறுவன அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னி யாவைச் சேர்ந்த ஆக்லேண்ட் ஆய்வு நிறுவனம் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்து சில நாட்களுக்கு முன்பு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
6 தமிழர்களுக்கு ஒரு ராணுவ வீரர் என்ற அடிப்படையில் தமிழர் பகுதிகளில் சுமார் 1,60,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்ந்து ராணு வத்தின் பிடியில் உள்ளன.
தமிழர்களிடம் இருந்து பறிக்கப் பட்ட நிலங்கள் அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அந்த இடங்களில் பெருமளவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. உல்லாச விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் நிலங்களை ராணுவ நிர்வாகம் வியாபாரநோக்கில் பயன்படுத்தி வருகிறது.
மேலும் தமிழர் பகுதிகளில் போர் நினைவு வெற்றிச் சின்னங்கள், புத்த மடாலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுபோல பல்வேறு வகைகளில் தமிழர்களின் கலாச் சாரத்தை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு, நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளது. ஆனால் உள்நாட்டுப் போரின்போது காணாமல்போன 70 ஆயிரம் பேரின் நிலை என்ன என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.
இறுதிப் போரின்போது மோச மான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் 57-வது படைப்பிரிவின் தளபதி ஜகத் டயஸ் ராணுவ தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டி ருப்பது அரசின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. புதிய அரசின் போர்குற்ற விசாரணைகள் ஜனநாயக முறையில் பாரபட் சமின்றி நடைபெறுமா என்பதும் சந்தேகம்தான்.
சுருக்கமாக சொல்வதென்றால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மறைமுக யுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது.
இவ்வாறு அந்த ஆய்வறிக் கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.