

அமெரிக்க இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.60 லட்சமாக உள்ளது என்று ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்காவில் வாழும் ஆசிய சமுதாய மக்களில் சீனர்கள் முதலிடம் உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் 2-ம் இடத்திலும் இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளனர். அமெரிக்கா வில் சுமார் 35 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. வியட்நாம், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
அதேநேரம் அமெரிக்காவில் அதிக வருவாய் ஈட்டும் ஆசிய சமுதாய மக்களில் இந்தியர்கள் முதலிடம் வகிக்கின்றனர். அமெரிக்க இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.60 லட்சமாக உள்ளது.