

ஜோர்டான் நாடு இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுவதையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜோர்டானின் ஹஷிமைட் ராஜ்யத்தில் உள்ள மக்களுக்கும் அரசருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜோர்டானின் ஹஷிமைட் ராஜ்யத்தின் அரசர் இரண்டாம் அப்துல்லாவுக்கு எழுதியுள்ள தனது வாழ்த்துச் செய்தியில் "ஜோர்டான் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, இந்திய அரசின் சார்பாகவும் இந்திய மக்கள் சார்பாகவும் என் சார்பாகவும் ஜோர்டானின் ஹஷிமைட் ராஜ்யத்தில் உள்ள மக்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவும் ஜோர்டானும் பெரும் பாரம்பரிய நட்புறவை கொண்டுள்ளது. இந்த உறவு எல்லா துறைகளிலும் நீடித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த உறவு மேலும் வலுவடைந்து இரு நாட்டு மக்களுக்கும் மேலும் நன்மையை உண்டாக்கும் என்று நான் நம்புகிறேன்.
உங்கள் உடல் நலத்துக்கும், ஜோர்டான் நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் வளத்துக்குமான எனது வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்" இவ்வாறு குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.