Published : 29 Apr 2015 06:44 PM
Last Updated : 29 Apr 2015 06:44 PM

நேபாள மக்களுக்கு நிவாரண நிதி திரட்டும் ஃபேஸ்புக்

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபாயகரமான எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த பேரிடர் சம்பவம் கடந்த 80 ஆண்டுகளில் காணாத ஒன்றாக உள்ளது. இந்தப் பேரிடரில் உயிர் பிழைத்த பல லட்சக்கணக்கான மக்கள் சர்வதேச நாடுகளின் உதவிகளை எதிர் நோக்கியுள்ளனர். பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வரும் நிலையில் சமூக வலைதளங்களும் நிவாரணத்து நிதி ஈட்ட முன்வந்துள்ளன.

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் இதற்காக சிறப்புப் பக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளில் அதிக மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கில், பயனாளிகளின் முகப்புப் பக்கத்தில், >நேபாளத்துக்கு உதவிடுவோம் என்ற தகவல் இடம்பெறுமாறு உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நினைக்கும் நெஞ்சங்கள், 'டொனேட்' என்ற பட்டனை அழுத்தினால், நிதி அளிப்பதற்கான புதிய பக்கம் திறக்கிறது.

அதில், உதவி அளிக்க விரும்பும் பயனாளிகள் தங்களது பெயர், நாடு, வங்கி அட்டையில் சில குறிப்புகள், நிதி அளிக்கக் கூடிய தொகையைக் குறிப்பிட்டு அதற்காக வழங்கப்பட்டுள்ள படிவ வகையிலான அந்தப் பக்கத்தை நிரப்ப வேண்டும்.

பின்னர், 'டொனேட் நவ்' என்ற பட்டனை அழுத்தியதும் இந்தப் பக்கம் குறிப்பிட்ட பயனாளியின் வங்கியின் ஆன்லைன் கணக்குக்கு இட்டுச் செல்கிறது.

இதன் பின்னர் வழக்கமான முறையில், வங்கி கணக்கு எண், கடவுசொல்லை வைத்து மிக எளிய முறையில் நன்கொடையை செலுத்தலாம். இதே வசதி ஃபேஸ்புக் செல்ஃபோன் அப்ளிகேஷனிலும் இடம்பெறுகிறது.

இந்தத் தொகையை சர்வதேச மருத்துவக் குழுவுக்கு ஃபேஸ்புக் வழங்கிறது. பெறப்படும் நன்கொடை முழுவதுமாக சர்வதேச மருத்துவக் குழுவுக்கு சென்றடையும் என்று ஃபேஸ்புக் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிவாரணமாக வழங்குவதாக ஃபேஸ்புக் திங்கள்கிழமை அறிவித்தது. இதன் அடிப்படையில், உதவிசெய்ய விரும்பும் ஃபேஸ்புக் பயனாளிகள் ஒவ்வொருவரின் உதவித் தொகையும் இதில் இணைக்கப்படும் என்று அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x