

இந்திய விமானப்படையிலுள்ள அமெரிக்க தயாரிப்பு விமானமான சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் கார்கோ ரக விமானங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்களை 9.6 கோடி டாலர் (சுமார் ரூ. 608 கோடி) மதிப்பில் வழங்க அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறப்பான போக்குவரத்து, உள்நாடு மற்றும் சர்வதேச அளவி லான மனிதாபிமான உதவிகள், பேரிடர் மீட்புத் தேவைகள் ஆகிய வற்றில் ஹெர்குலிஸ் விமானத்தின் சேவைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்கள் இந்தியா வுக்குத் தேவையாக இருக்கின்றன. எனவே, அதனை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என, ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஒத்துழைப்பு இந்திய விமானப்படையின் ஹெர் குலிஸை எப்போதும் ஆயத்த நிலையில் வைத்திருக்கும் திட்டத் துக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட் டுள்ள நேபாளத்தில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற் கும், சிக்கியுள்ளவர்களை மீட்டு வரு வதற்கும் இந்தியா இவ்விமானங் களை தற்போது பயன்படுத்தி வருகிறது.
வன்பொருட்கள், தொழில் நுட்பம், பயிற்சி, பயிற்சி உப கரணங்கள், பொறியியல் மற்றும் இதர சேவைகள் அனைத்தும் இந்த ரூ.608 கோடி கருத்துருவில் அடங்கும்.