ஜெர்மன்விங்க்ஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் வெளியேற்றம்
இத்தாலியிருந்து புறப்பட்ட ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அதிலிருந்த 132 பயணிகள் வெளியேற்றபட்டனர்.
ஞாயிற்றுகிழமை இத்தாலியிலிருந்து ஜெர்மனுக்கு பயணம் செய்ய புறப்பட்ட ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக லுப்தான்சா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தளத்திலிருந்து விமானத்தை இயக்கியபோது விமானிக்கு மிரட்டல் அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ஜெர்மன் போலீஸாருக்கும் மிரட்டல் அழைப்பு வந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக விமானத்திலிருந்து 132 பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சோதனையில் வெடிகுண்டு சிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் ஜெர்மன்விங்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதிய விபத்தில் அதிலிருந்த 150 பயணிகளும் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
