Published : 05 Apr 2015 12:32 PM
Last Updated : 05 Apr 2015 12:32 PM

கென்யா பல்கலைக்கழகம் மீதான தாக்குதல்: பலி எண்ணிக்கை 148 ஆக உயர்வு

கென்யாவில் பல்கலைக்கழகத் துக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கென்யாவில் உள்ள கர்ரிஸா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த 5 அல்- ஷபாப் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். கிறிஸ்தவ மாணவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பல மாணவர்களை பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்தனர். இதில் முஸ்லிம் மாணவர்களை விடுவித்து விட்டு, கிறிஸ்தவ மாணவர்களை சுட்டுக் கொல்லத் தொடங்கினர்.

16 மணி நேரம் நீடித்த மோதலுக்குப் பிறகு கென்ய பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு தீவிர வாதிகளை சுட்டுக் கொன்றனர்.

இத்தாக்குதலில் படுகாய மடைந்த பல மாணவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந் தனர். இவர்களில் பலர் உயிரிழந் துவிட்டனர். இந்நிலையில் இத்தாக் குதல் சம்பவத்தில் இதுவரை 148 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 79 தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் தொடர்புடை யவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப் பட்டிருப்பதாக கென்ய உள்துறை அமைச்சர் ஜோசப் கெய்ஸ்ரி தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தீவிரவாதத்தை ஒடுக்க கென்யாவுக்கு உதவத்ற தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளன.

அல் ஷபாப் தீவிரவாதிகள் கென்யாவில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தி 10 பேரை கொன்றனர். 2013-ல் வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தி 72 பேரை கொன்றனர். முஸ்லிம் அல்லாதவர்களை குறிவைத்து கொலை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x