

வங்கதேசத்தின் நாடாளுமன்ற தலைவர் ஷிரின் ஷர்மின் சௌத்ரி, நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்.
டெல்லியில் வரும் 26ம் தேதி நடக்கும் விழாவில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற் கிறார். அந்த விழாவில் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்பார் என எதிர்பார்க்கப் பட்டது.
மாறாக அவர் ஜப்பானில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க முன் கூட்டியே இறுதி செய்யப்பட்டு விட்டதால் அவருக்கு பதிலாக நாடாளுமன்ற தலைவர் சௌத்ரி பங்கேற்பார் என வங்கதேச வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வரும்படி வங்கதேச பிரதமர் ஹசீனா உள்பட சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு) நாடு களின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் 4 நாள் பயணமாக டோக்கியோவுக்கு ஹசீனா மே 24ம் தேதி புறப்படுவதாகவும் அதனால் அவர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாது என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.