

சீன ஆக்கிரமிப்பு திபெத் பகுதியில் நடந்த நிலநடுக்கம் மற்றும் அதன் பின்னர் வந்த நிலஅதிர்வுகளுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 117 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 25-ம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன.
நேபாளத்தின் எல்லைகளில் உள்ள பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் சீன ஆக்கிரமிப்பாக இருக்கும் தென் கிழக்கு திபெத் பகுதியின் நிலைமை மோசமானதாக உள்ளது.