

நியூஸிலாந்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
நியூஸிலாந்தின் தெற்கு தீவு நகரமான கைகவுரா அருகே 66 கிமீ தொலைவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.36-க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக நியூஸிலாந்து புவியியல் ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலுக்கடியில் 55 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சேதம் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
முன்னதாக நேற்று மாலையும் சேலான நில அதிர்வு இருந்ததால் முன்னெச்சரிக்கையில் கவனம் செலுத்தப்பட்டது.
முன்னச்சரிக்கையாக நியூஸிலாந்து நகரங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.