பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
Updated on
1 min read

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த 17 கைதிகளுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகர் ராணுவ பள்ளியில் கடந்த டிசம்பர் 16-ம் தேதி தலிபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 132 மாணவர்கள் உட்பட 145-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மரண தண்டனைக்கு 6 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தான் சிறைகளில் மொத்தம் 8000 மரண தண்டனை கைதிகள் உள்ளனர். அவர்களில் இதுவரை 39 கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த மார்ச் 12-ஆம் தேதி 12 பேருக்கு தண்டனை நிறைவேற்றபட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in