வேற்று கிரகவாசிகளின் விவரங்களை உலக தலைவர்கள் மறைக்கின்றனர்: கனடா முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பேச்சு

வேற்று கிரகவாசிகளின் விவரங்களை உலக தலைவர்கள் மறைக்கின்றனர்: கனடா முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பேச்சு
Updated on
1 min read

'வேற்றுகிரகவாசிகள் அவ்வப்போது உலகுக்கு வருவது உண்மை, அந்த விவரங்கள் அனைத்தையும் உலக நாடுகளின் தலைவர்கள் மக்களுக்கு தெரிவிக்காமல் மறைக்கின்றனர்" என்றார் கனடாவின் முன்னாள் அமைச்சர் ஒருவர்.

பால் டி.ஹெலர் (91), இவர் 1963 முதல் 1967- ஆண்டு வரை கனடா நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். அதாவது பனிப் போர் நடந்தபோது பொறுப்பில் இருந்தவர் ஆவார்.

டொராண்டோ கல்கேரி பல்கலைக்கழகத்தில் நடந்த அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் தட்டு குறித்த மாநாட்டில் நேற்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு பேசிய பால் டி.ஹெலர் பேசினார்.

அப்போது ஆராய்ச்சி மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், "செய்தி நிறுவனங்கள் வேற்றுக் கிரகவாசிகள் குறித்த ஆவணங்களைக் கண்டுகொள்வதே இல்லை. ஏனென்றால் அவை அனைத்தும் அசாதாரணமாக இருப்பதால் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டிவிடுகின்றனர்.

ஆனால் இவை அனைத்தும் ஒரு நாள் வெளிவரும். பூமிக்கும் வேற்றுக் கிரகவாசிகள் வந்து செல்வதை அறிந்தும் அது குறித்த விவரங்களை அளிக்காமல் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அதனை மறைக்கின்றனர். உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். மக்கள் அனைவரும் உண்மையைக் கூறுங்கள் என்று உலகத் தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்புவார்கள்.

வெவ்வேறு தருணங்களில் குறைந்தது 4 வகையான வேற்றுக் கிரகவாசிகள் மற்றும் அடையாளம் காணமுடியாத பறக்கும் தட்டு பூமிக்கு வந்து இருக்கலாம். இதற்கான சான்றுகள் இருக்கின்றன. இது குறித்த தகவல்களை உலகத் தலைவர்கள் ஒப்புக்கொள்ள முன்வர வேண்டும்" என்றார்.

பால் டி.ஹெலர், கடந்த 2005 முதலே வேற்றுக் கிரகவாசிகள் குறித்த விவரங்களை அரசுகள் மூடி மறைப்பதாகவும் அதனை வெளிப்படையாகக் கூற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்து வருகிறார். மாணவர்கள் மத்தியில் பால் டி.ஹெலர் பேசியதை மிர்ரார் செய்தி தொலைக்காட்சி வெளியிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in