

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் ஸ்விட்சர்லாந்தில் குடியிருந்த வீட்டை அருங்காட் சியகமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 14 ஆண்டுகளாக விவாதிக் கப்பட்டு வந்த இந்த முயற்சி, விரைவில் செயல்வடிவம் பெறவுள்ளது. இந்த அருங்காட்சி யகத்தை வரும் 2016-ம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோர்சியர் சர் வெவீ என்ற கிராமத்தில் அமைந்துள்ள அந்த வீடு, ஜெனீவா ஏரி அருகே ரம்மி யமான இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது. சார்லி சாப்ளின், தனது இறுதி 25 ஆண்டுகளை இந்த வீட்டில்தான் கழித்தார்.
வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற 4 கோடியே 57 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.273 கோடி) செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. கலாச்சார ரீதியாக கலை அம்சம் நிறைந்த பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகத்தை கட்டமைக்கப்போவதாக அதன் காப்பாளர் வெஸ் துராண்ட் கூறினார்.