

லால் மஸ்ஜித் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு எதிராக பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முஷராப் அதிபராக இருந்தபோது 2007-ம் ஆண்டு லால் மஸ்ஜித் வழிபாட்டு தலத்தில் நடந்த ராணுவ தாக்குதலின் போது காஸி அப்துல் அஜீஸ் என்ற மதத்தலைவர் கொல்லப்பட்டார்.
2013-ல் முஷாரப் மீது வழக்கு பதியப்பட்டு இஸ்லாபாத் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது. வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கோரி முஷராப் மனு செய்தார்.
இன்று நடந்த விசாரணையில் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, முஷாரப்புக்கு கைது வாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு ஏப்.27-ம் தேதி தள்ளிவைக்கப்பட்டது.