ஏமனுக்கு சவுதி அரேபியா ரூ.1,700 கோடி உதவி

ஏமனுக்கு சவுதி அரேபியா ரூ.1,700 கோடி உதவி
Updated on
1 min read

ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர் களுக்கு எதிரான தாக்குதலுக்கு தலைமை ஏற்றுள்ள சவுதி அரேபியா, அந்நாட்டுக்கு ரூ.1,700 கோடி மனிதாபிமான உதவி அளிப்பதாக நேற்று அறிவித்தது.

ஐ.நா. விடுத்த வேண்டுகோளை ஏற்று, போரினால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு அவசர கால உதவி அளிக்கும் வகையில் சவுதி அரேபிய அரசர் சல்மான் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஏமனில் நடந்து வரும் போரில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் இறந் துள்ளனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in