

வடக்கு கொலம்பியாவில் புன்டேசியன் பகுதியில் பேருந்து ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
சுமார் 3 முதல் 12 வயதுள்ள குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து புன்டேசியன் எனுமிடத்தில் தீப்பற்றி எரிந்தது. நின்று போன பேருந்தை மீண்டும் இயக்க கார்புரேட்டரில் ஓட்டுநர் பெட்ரோல் ஊற்ற முயன்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்விபத்தில் 32 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர். காயமடைந்த 25 பேரில், 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தீப்பற்றியதும் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மக்களின் கோபத்துக்கு அஞ்சி, கைது செய்யப்பட்ட ஓட்டுநர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற விவரத்தை கொலம்பிய அரசு ரகசியமாக வைத்துள்ளது.