

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினரை குறிவைத்து சவுதி அரேபியா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 532 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஏமனில் தலைநகர் சனா உட்பட பெரும்பாலான பகுதிகளை ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அவர்களுக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹதி படையினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதிபர் மன்சூர் ஹதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா வான்வழி, தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது.
ஏமைன் தலைநகர் சனா மீது இரு நாள்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 50 பேர் உயிரிழந் துள்ளனர். 532 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.