

சவுதி அரேபிய மன்னர் சல்மான் உள்துறை அமைச்சரை தனது அரியணை வாரிசாக அறிவித்தார்.
பட்டத்து இளவரசராக மாக்ரென் பின் அப்துல் அஜீஸ் பின் சாத் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலை யில் நேற்று வெளியான அரசு உத்தரவில், இவருக்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் இளவரசர் முகம்மது பின் நயேஃப் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சவுதி அரேபியாவில் அல் காய்தா அமைப்பை ஒடுக்கியவர் ஆவார்.
பட்டத்து இளவரசர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று மாக்ரென் கேட்டுக்கொண்டதன் பேரில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக் கின்றன.