

நேபாள் நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரம்பரியச் சின்னமான 9 அடுக்குகள் கொண்ட தராஹரா கோபுரம் பூகம்பத்தில் தரை மட்டமானது. இதுவரை 180 உடல்கள் இதன் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை நண்பகல் 11.41 மணியளவில் நேபாளத்தை இமாலயத்தின் மிகப்பெரிய பூகம்பம் புரட்டிப் போட்டது. இதில் நூற்றாண்டுக் கணக்கில் பழைமையான கோயில்கள் பல இடிந்து விழுந்தன.
குறிப்பாக யுனெஸ்கோ அங்கீகரித்த வரலாற்றுப் பாரம்பரியச் சின்னமான 9 அடுக்குகள் கொண்ட தராஹரா கோபுரம் பூகம்பத்தில் தரைமட்டமானது. இது காத்மண்டு நகரை அழகுபடுத்தும் சின்னமாக திகழ்ந்து வந்தது.
இந்த இடிபாடுகளுக்கு அடியிலும் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோபுரம் 1832-ம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பார்வையாளர்களுக்கு இது திறந்து விடப்பட்டுள்ளது. 8-வது தளத்திலிருந்து பார்க்கக் கூடிய வசதியும் செய்யப்பட்டிருந்தது.