Published : 31 May 2014 12:06 PM
Last Updated : 31 May 2014 12:06 PM

‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி: அமெரிக்க இந்திய மாணவர்கள் சாம்பியன்

ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் (ஸ்பெல்லிங் பீ) தேசிய போட்டியில் அமெரிக்க இந்திய மாணவர்கள் ஸ்ரீராம் ஜெ ஹத்வார், அன்சுன் சுஜோய் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இப்போட்டியில் தொடர்ந்து 7 முறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே வென்று சாதனை படைத்துள்ளனர். தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்பான இப்போட்டியை லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பார்த்து ரசித்தனர்.

14 வயதாகும் ஸ்ரீராம் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர். டெக்சாஸை சேர்ந்த அன்சுனுக்கு 13 வயதாகிறது. அவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஆண்டைப் போலவே ஸ்ரீராம், அன்சுன், மிசௌரியைச் சேர்ந்த கோகுல் வெங்கடாசலம் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இதில் ஸ்ரீராம், அன்சுன் ஆகியோர் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றனர். இதற்கு முன்பு கடைசியாக 1962-ல் இருவர் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றனர்.

இப்போட்டியில் மொத்தம் 12 பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இதில் 6 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x