பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி மொபைல் போன்: பிரிட்டனில் விற்பனைக்கு வந்தது

பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி மொபைல் போன்: பிரிட்டனில் விற்பனைக்கு வந்தது
Updated on
1 min read

பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி மொபைல் போனை பிரிட்டனைச் சேர்ந்த ஓன்போன் நிறுவனம் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.5900 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த போன் மூலம், பார்வையற்றவர்கள் எளிதில் மற்றவர்களைத் தொடர்பு கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த போன், பிரிட்ட னில் மட்டும் கிடைக்கிறது. இந்த போனின் முன், பின் பக்கங்களில் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளன. அவற்றை விருப்பப்படி மாற்றியமைத்துக் கொள்ள முடியும். பிரெய்லி முறை தெரியாதவர்களும் இந்த போனில் வழக்கமான முறையில் தகவல் களைப் படிக்க முடியும்.

“முப்பரிமாணத் தொழில் நுட்பத்துடன் அச்சடிக்கப்பட்ட கீ பேடுகளைக் கொண்ட முதல் பிரெய்லி போன் இதுவாகும். இந்தப் போனில் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்டிருக்கும் பிரெய்லி எழுத்துகளை நாம் தேவைப்பட்டால் அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த தொழில்நுட்பத்துக்கு காப் புரிமைக்காக விண்ணப்பிக்கப் பட்டுள்ளது” என இந்த மொபைல் போனைக் கண்டறிந்த டாம் சுந்தர்லேண்ட் தெரிவித்துள்ளார்.

சந்தையில் விற்பனைக்கு வந் துள்ள முதல் பிரெய்லி போன் இது எனக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் கிரியேட் நிறுவனம், பிரெய்லி வசதி கொண்ட ஸ்மார்ட்போனைக் கண்டறிந்தது. பிரெய்லி எழுத்துகளைத் திரை யில் காட்டும் வசதியும் அந்த போனில் இணைக்கப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in