

சிரியாவின் வடக்குப் பகுதியில் நேற்று ஐ.எஸ்.தீவிரவாதிகள் 10 பேரை கொலை செய்தனர். மேலும் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினர்.
சிரியாவில் செயல்பட்டு வரும் சிரியா மனித உரிமை கண்காணிப்பகம் அளித்துள்ள தகவலின்படி, தங்களை வேவு பார்த்ததாகக் கூறி ஆறு பேரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேலும் நான்கு பேரை தங்களுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி கொலை செய்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் குர்து இன மக்கள் ஆவர். தவிர, கல்காலாவில் உள்ள சிரியா ராணுவ விமான நிலையத்துக்கு அருகில் போர் விமானம் ஒன்றை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். அதன் நிலை என்னவென்று இப்போது வரை தெரியவில்லை, என்று அந்த மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது.