போலீஸ் விசாரணையில் கருப்பின இளைஞர் பலி: அமெரிக்காவில் கலவரம் வெடித்தது

போலீஸ் விசாரணையில் கருப்பின இளைஞர் பலி: அமெரிக்காவில் கலவரம் வெடித்தது
Updated on
1 min read

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கருப்பின இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் பெரும் கலவரம் வெடித்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் பால்டிமோர் பகுதியைச் சேர்ந்தவர் பிரெட்டி கிரே (25). கருப்பினத்தை சேர்ந்த அவரை கடந்த ஏப்ரல் மாதம் போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவரை கடுமையாக அடித்து உதைத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த மாதம் அவர் உயிரிழந்தார்.

இதனால் பால்டிமோர் பகுதி யில் பெரும் கலவரம் வெடித்துள் ளது. நகரின் முக்கிய கட்டிடங்கள், சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள் தீ வைத்து கொளுத் தப்படுகின்றன. குறிப்பாக போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்படு கிறது. பல்வேறு இடங்களில் போலீஸாருக்கும் கருப்பின மக்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

கல் வீச்சு சம்பவங்களில் சுமார் 15-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந் துள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கலவரத்தைக் கட்டுப்படுத்த இரவில் ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கலவரத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in