காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்: அமெரிக்கா அறிவிப்பு

காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்: அமெரிக்கா அறிவிப்பு
Updated on
1 min read

காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பாததால் அமெரிக்கா அந்த முயற்சி யில் இறங்காது என பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தானுக்கான அந்நாட்டின் சிறப்பு பிரதிநிதி ஜேம்ஸ் டாபின்ஸ் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜேம்ஸ் கூறியதாவது: மத்தியஸ்த யோசனையை இந்தியா நிராகரிப் பதால் அமெரிக்கா ஒன்றும் செய்ய இயலாது. மூன்றாம் தரப்பினர் இந்த விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிராகரித்து வருகிறது.

நேரடியாகவே பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை இது என்பது இந்தியாவின் நிலை. மூன்றாம் தரப்பின் தலையீட்டை அது விரும்பவில்லை. எனவே மத்தியஸ்த முயற்சியை அது நிராகரித்துவிட்டது.

இந்தியாவின் இத்தகைய நிலைப்பாடு காரணமாக அமெரிக் காவோ அல்லது இதர தரப்பினரோ குறிப்பிட்ட வரம்புக்குள்தான் இந்த விவகாரத்தில் செயல்பட முடியும்.

தாம் எதிர்கொள்ளும் எல்லை தாண்டிய தீவிரவாதம், தீவிரவாத தாக்குதல்கள் இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் பாகிஸ் தான் மண்ணிலிருந்துதான் உருவெ டுப்பதாக இந்தியா நம்புகிறது.

ஆப்கானிஸ்தானைப் போலவே எல்லோரின் நலன் கருதி இந்த பிரச்சினையும் கையாளப்பட வேண்டும். பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்துவதை அரசின் கொள்கையாக கொள்வதை இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு தனது பேட்டியில் கூறினார் ஜேம்ஸ் டாபின்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in