டைட்டானிக் பேரிழப்பு- லிபிய படகு விபத்துக்கு ஐ.நா. இரங்கல்

டைட்டானிக் பேரிழப்பு- லிபிய படகு விபத்துக்கு ஐ.நா. இரங்கல்
Updated on
1 min read

சுமார் 700 அகதிகளுடன் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்துக்குள்ளான லிபியா சம்பவத்துக்கு ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இத்தாலி அருகே மத்திய தரைக்கடல் பகுதியில், அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடந்த சனிக்கிழமை மூழ்கி 700-க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான்கிமூன் கூறுகையில், 'இந்த சம்பவம் தான் உண்மையான டைட்டானிக் சம்பவம்,' என்று கூறி, இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய தரைக்கடல் பகுதியில் பயணிக்கும் குடியேறும் மக்கள் தொடர்ந்து பெரும் ஆபத்தை சந்தித்து வருவதால் இதற்கான வழியை காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in